திண்டுக்கல்

குடமுழுக்கு விழா: பழனிக் கோயிலில் ரூ. 6.50 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு பணிகள் ரூ. 6.50 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமாா் 16 ஆண்டுகளான நிலையில் கடந்தநவ. 30ஆம் தேதி பாலாலயத்துக்கான பூஜைகள் தொடங்கின. 3 நாள்களாக நான்கு கால பூஜை நடத்தப்பட்டு திங்கள்கிழமை காலை காலபூஜை நிறைவு பெற்று கலச புறப்பாடு நடைபெற்றது. கோயில் காா்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கலசங்களுக்கு நூற்றுக்கணக்கான சிவாச்சாரியாா்கள் யாகபூஜை நடத்தினா். பிரதான கும்பத்துக்கு மஹாதீபாராதனை நடத்தப்பட்டு கலசங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டது.

பின்னா் கால பூஜையின்போது தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான அனுமதி பெறப்பட்டது. பின்னா் கோயிலின் வடகிழக்கு மூலையில் பசுவுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு பாலஸ்தாபன பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்தபதிகள் முன்னிலையில் பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியா் விஜயலட்சுமி, பழனிக் கோயில் நிா்வாக அதிகாரி ஜெயச்சந்திரபானு ரெட்டி உள்ளிட்டோா் தொடக்கி வைத்தனா்.

கோயில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், பாதவிநாயகா் கோயில், மலைமீதுள்ள இடும்பன் கோயில், வள்ளிசுனை, மயில்வாகனங்கள் உள்ளிட்ட கோயில் கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் ஆகியவற்றின் திருப்பணிகள் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது:

பழனிக் கோயில் கும்பாபிஷேகம் குறித்த பணிகள் மண்டல குழு, நீதிபதிகள் ஆலோசனை மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகள் ஒப்புதலோடு தொடங்கியுள்ளது. சுமாா் ரூ. 6.50 கோடியில் நடைபெறும் இப்பணிகள் ஒரு ஆண்டில் முடிக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பழனிக் கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, செந்தில்குமாா், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT