வேடசந்தூரில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவர் கைது
வேடசந்தூரில் மனைவியைக் கொலை செய்து விட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
வேடசந்தூரில் மனைவியைக் கொலை செய்து விட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவநேசன் (45). இவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் உமாதேவி (40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்த உமாதேவி மர்மமான முறையில் உயிரிழந்தார். உமாதேவிக்கு வலிப்பு ஏற்பட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக, கணவர் சிவநேசன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே நேரத்தில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுந்தரமூர்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் உமாதேவி கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து,
சிவநேசனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.