திண்டுக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்: திண்டுக்கல், தேனியில் 8,609 பேர் பங்கேற்பு

திண்டுக்கல், தேனி மாவட் டங்களில் 8,609 பேர் சனிக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வை (முதல் தாள்) எழுதினர். 

DIN


திண்டுக்கல், தேனி மாவட் டங்களில் 8,609 பேர் சனிக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வை (முதல் தாள்) எழுதினர். 
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சனி, ஞாயிறு என 2 நாள்கள் நடைபெறுகின்றன. முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 987 ஆண்கள் மற்றும் 4,780 பெண்கள் என மொத்தம் 5767 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூர் பகுதிகளில் மொத்தம் 14 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் 880 ஆண்கள் மற்றும் 4260 பெண்கள் என மொத்தம்  5140 பேர் மட்டுமே முதல் தாள் தேர்வில் பங்கேற்றனர். 107 ஆண்கள் மற்றும் 520 பெண்கள் என மொத்தம்  627 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 
தேர்வு நடைபெற்ற மையங்களில் இணை இயக்குநர் (ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்) அருள் முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சொ.சாந்தகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், சுப்பிரமணி, கருப்புசாமி, பாண்டித்துரை ஆகியோர் பார்வையிட்டனர்.
தேனி: தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை (முதல் தாள்) 3,469 பேர் எழுதினர்.  தேனி, உத்தமபாளையம் வட்டாரங்களில் 9 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் இத்தேர்வு நடைபெற்றது.
இத் தேர்வுக்கு மொத்தம் 3,911 பேர் விண்ணப்பித்திருந்ததில், 3,469 பேர் தேர்வு எழுதினர். 442 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஞாயிற்றுக்கிழமை  (ஜூன் 9) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT