தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29ஆம் தேதி ஆஜராக வேண்டுமென திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள பள்ளப்பட்டி கிராமத்தில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக, அரசு வழக்குரைஞர் மனோகரன் சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கே.முரளிசங்கர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.