திண்டுக்கல்

அம்மையநாயக்கனூரில் குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு

DIN

திண்டுக்கல் மாவட்டம்,  கொடைரோடு அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் குடிநீர் குழாய் அருகே கழிவு நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
  கொடைரோடு அருகே  உள்ள அம்மையநாயக்கனூர் பேருராட்சி அலுவலகப் பகுதியில் உள்ள கி.புதூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் அருகே கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால்,  குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 
 எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT