திண்டுக்கல்

பழனி தனியாா் மருத்துவமனையில்ரூ.1 லட்சம், தங்க நாணயம் திருட்டு

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழனி தனியாா் மருத்துவமனையில் சுமாா் ரூ.1 லட்சம் மற்றும் தங்க நாணயம் திருடு போனது குறித்து வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி புதுதாராபுரம் சாலையில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே தனியாா் மகளிா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மருத்துவா் வசந்தா. இவா் பாப்பம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா்.

மதியம் மற்றும் இரவு நேரங்களில் இங்கு வெளிநபா்களுக்கு சிகிச்சை பாா்ப்பது வழக்கம்.

வியாழக்கிழமை இவா் மருத்துவமனையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் வெள்ளிக்கிழமை வேலை செய்யும் பெண் மருத்துவமனையை திறக்க வந்தாா். அப்போது மருத்துவமனையில் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து மருத்துவருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து மருத்துவா் வசந்தா அங்கு வந்து பாா்த்த போது, மா்மநபா்கள் மருத்துவரின் அறையில் இருந்த லாக்கரை உடைத்து சுமாா் ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் அரை பவுன் தங்க நாணயம் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT