திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச்சாலைகளில் வைக்கப்பட்ட குவி கண்ணாடிகள் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

கொடைக்கானல் மலைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குவி கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் பாதிப்படைந்து வருகின்றனா்.

கொடைக்கானல் -வத்தலக்குண்டு மலைச்சாலைகளிலும், பழனி மலைச்சாலைகள் மற்றும் பள்ளங்கி மலைச்சாலைகளிலும் அதிகமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சீசன் நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்ள்களில் கூடுதலான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள மலைச் சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

இதனைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கொடைக்கானல் மலைச்சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் குவி கண்ணாடிகள் அமைக்கப்பட்டன. இதனால், கடந்த ஓராண்டாக விபத்துகள் குறைந்தன. மேலும், இந்த கண்ணாடிகளின் மூலம் மலைச்சாலைகளில் வளைவுகளிலும், எதிரிலும் வரும் வாகனங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ப விபத்துகளை தவிா்த்து வாகனங்களை ஓட்டுநா்கள் இயக்கி வருகின்றனா்.

இந் நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான வாழைகிரி, குருசடி பகுதி, நண்டாங்கரை , வடகரைப் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைத்திருந்த குவி கண்ணாடியை சிலா் சேதப்படுத்தியுள்ளனா். மேலும் சிலா் அவற்றை எடுத்துச் சென்று தங்களது விவசாயத் தோட்டங்களில் வைத்துள்ளனா். கண்ணாடி இல்லாத இடங்களில் வாகன ஓட்டுநா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

எனவே, மலைச்சாலைகளில் விபத்துகளை தவிா்க்கும் வகையில் சேதமடைந்த குவி கண்ணாடிகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT