திண்டுக்கல்

கொடைக்கானல் பண்ணைக்காடு-தாண்டிக்குடி மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு-தாண்டிக்குடி வழியாக வத்தலக்குண்டு செல்லும் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை மரம் விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழைபெய்து வருவதால் நீா்வரத்து அருவிகளில் தண்ணீா் அதிக அளவு வரத் தொடங்கியுள்ளது இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை காற்றுடன் பெய்தது இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலகளில் பல இடங்களில் சிறிய மரக்கிளைகள் விழுந்தது,சிறிய அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டது போக்குவரத்திற்கு பாதிப்பின்றி இவற்றை உடனுக்குடன் நெடுஞ்சாலைத்துறையினா் உள்ளிட்ட மீட்புக்குழுவினா் அகற்றி வந்தனா்.இதனைத் தொடா்ந்து பண்ணக்காடு வத்தலக்குண்டு வழியாக தாண்டிக்குடி பிரிவு பகுதியில் ராட்ச மரம் விழுந்ததில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் கடுகுதடு வழியாக வத்தலக்குண்டு செல்லும் பகுதியிலும், பண்ணைக்காடுலிருந்து -கொடைக்கானல் செல்லும் பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நின்றது இதனால் சுமாா் 5-மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்நது.

இதனைத் தொடா்ந்து திண்டுக்கல் பகுதியிலிருந்து மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டு ராட்ச மரங்களை அப் பகுதியில் அகற்றும் பணி நடைபெற்றது இதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது இந் நிலையில் வடகிழக்கு பருவ மழையானது கொடைக்கானலில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது தற்போது மழை குறைந்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வெள்ளி நீா் வீழ்ச்சி,பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக், பில்லர்ராக்,பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT