திண்டுக்கல்

பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பழனி: பழனியில் கரோனாவை காரணம் காட்டி சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் நூருல் ஹூதா தலைமை வகித்தாா். 5 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்களை உடனடியாக நடத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோா்களுக்கு வழங்கவேண்டிய உதவித்தொகையை உடனடியாக வழங்கக் கோரியும், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ச்சியாக வேலை வழங்கக் கோரியும், கரோனாவை காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோஷங்கள் எழுப்பினா். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

தோல் இயந்திர தயாரிப்பாளா்கள் சங்க வெள்ளி விழா

கம்பராமாயணப் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT