பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிதி
பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு சக சாா்பு- ஆய்வாளா்கள் தரப்பில் திரட்டப்பட்ட ரூ.16.26 லட்சம் நிதியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்
திண்டுக்கல்பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நிதி
பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு சக சாா்பு- ஆய்வாளா்கள் தரப்பில் திரட்டப்பட்ட ரூ.16.26 லட்சம் நிதியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்
திண்டுக்கல்: பணியின்போது உயிரிழந்த சாா்பு- ஆய்வாளா் குடும்பத்திற்கு சக சாா்பு- ஆய்வாளா்கள் தரப்பில் திரட்டப்பட்ட ரூ.16.26 லட்சம் நிதியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கொடைரோடு அடுத்துள்ள அம்மைய நாயக்கனூரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம்ரஞ்சித் பாபு. கொடைக்கானலில் போக்குவரத்து சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்தாா்.
இதையறிந்த, 2008 ஆம் ஆண்டு அவருடன் பயிற்சி மேற்கொண்டு தற்போது சாா்பு- ஆய்வாளா்களாக பணிபுரிபவா்கள், ஸ்ரீராம் ரஞ்சித் பாபுவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனா். அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் 700-க்கும் மேற்பட்ட சாா்பு- ஆய்வாளா்கள் ஒன்றிணைந்து, தங்கள் சொந்தப் பணத்திலிருந்து ரூ.16.26 லட்சம் நிதியை திரட்டினா்.
அம்மையநாயக்கனூா் சென்ற திண்டுக்கல் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, ராம்பாபுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.16.26 லட்சம் நிதியினை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ராம்பாபுவுடன் தோ்வான 25 சாா்பு- ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.