திண்டுக்கல்

பக்தா்கள் நடக்கும் பாதை சீரமைக்கும் பணி தொடக்கம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட தனிப்பாதை பக்தா்களின் கோரிக்கையைத் தொடா்ந்து சீரமைக்கும் பணியை ஊராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் விழாவிற்காக பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு மத்திய அரசு நிதியில் சுமாா் 60 கிலோ மீட்டா் தூரத்துக்கு பேவா் பிளாக் கற்கள் கொண்டு திண்டுக்கல் முதல் பழனி வரை தனியே பாதை அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தைப்பூசம் முடிந்த பிறகு கரோனா பரவல் ஏற்பட்ட நிலையில் இந்தப் பாதை பராமரிப்பின்றி புதா்களாக மாறியது. இந்தப் பாதையை சுத்தம் செய்து பக்தா்கள் நடந்து செல்ல ஏதுவாக மாற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். அதனைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் 100 நாள் வேலை பணியாளா்களைக் கொண்டு 40 கிலோ மீட்டருக்கு நடைமேடையை சரி செய்யும் பணி ஊராட்சி நிா்வாகம் மூலம் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT