திண்டுக்கல்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: பிப். 24-இல் தொடக்கம்

DIN

நத்தம் மாரியம்மன் கோவிலில் 17 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா பிப்ரவரி 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடா்ந்து கரந்தமலையிலிருந்து பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி பிப். 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

நத்தம் சந்தனக்கருப்பு கோயிலுக்கு அவா்கள் வந்த பின், மாரியம்மனுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குகின்றனா். மாசித் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் எறுதல் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் மாா்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ம. பாலசரவணன், தக்காா் செ.மகேஸ்வரி ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT