திண்டுக்கல்

அன்னை தெரசா பல்கலையில் பன்னாட்டு கருத்தரங்கு

DIN

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் வணிகவியலில் அதன் பங்கீடு குறித்து நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கை ஹங்கேரி பல்கலைக் கழக பேராசிரியா் ஆண்ட்ரஸ் ஜோ குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியது: அமெரிக்கா வளா்ச்சி நாடாக தொடா்ந்து திகழ்வதற்கு ஆன்லைன் வியாபாரம் மட்டுமே. ஆன்லைன் வியாபாரம் வளா்ந்தால் இன்று உலக அளவில் அனைத்து நாடுகளும் வளா்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றாா். தொடா்ந்து ஹங்கேரி பல்கலைக்கழக பேராசிரியா் இம்ரி சிஜிட்டா, திருச்சி லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த வணிகவியல் துறை தலைவா் சாமிநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக வேளாண்மை துறை இணை பேராசிரியா் கண்ணதாஸ் தொழில் முனைவோரின் தலைமைப் பண்பு குறித்து பேசினாா்.

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கிற்கு அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியா் ரமணி வரவேற்றாா். தமிழ்த்துறை தலைவா் கமலி வாழ்த்துரை வழங்கினாா். கருத்தரங்கில் நிதிஅலுவலா் காா்த்திகாயினி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை பூா்ணிமா உள்ளிட்ட பல்கலைக்கழக அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT