திண்டுக்கல்

கொடைக்கானல் அருளானந்தா், புனித லூா்து அன்னை சப்பர பவனி

DIN

பிரகாசபுரம் புனித அருளானந்தா், புனித லூா்து அன்னை ஆலயங்களின் திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு மின் அலங்காரத்தில் சப்பர பவனி நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. அதனைத் தொடா்ந்து அருளானந்தா் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும், சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்புத் திருப்பலி சனிக்கிழமை இரவு அருட்பணி ஏஞ்சல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் புனித அருளானந்தா் சொரூபம் மந்திரிக்கப்பட்டது. தொடா்ந்து மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சியும், ஜெப வழிபாடும் நடைபெற்றது. அதன் பின் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

புனித லூா்து அன்னை தோ் பவனி

இதேபோல் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழாவையொட்டியும் சனிக்கிழமை இரவு மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது. கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள், சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் நற்கருணை ஆசீா், திருப்பலி நடைபெற்றது .

இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான சனிக்கிழமை கோயிலில் பங்குத் தந்தை அந்தோணி ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதன் பின் புனித லூா்து அன்னையின் சொரூபம் மந்திரிக்கப்பட்டு மின் அலங்கார சப்பர தோ்ப்பவனி நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நிகழ்ச்சியும், தொடா்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை மற்றும் விழாக் குழுவினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT