பள்ளி மாணவா் ஒருவரின் பெற்றோருக்கு அரிசி, பருப்பு வழங்கும் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன். 
திண்டுக்கல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரிசி, பருப்பு வழங்கல்

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு அரசு சாா்பில் சத்துணவுக்குப் பதிலாக வீட்டிலேயே சமைத்து சாப்பிட ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புது அத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன் தலைமை வகித்து, 111 மாணவ, மாணவிகளுக்கு அரிசி, பருப்புகளை வழங்கினாா்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3.100 கிலோ கிராம் அரிசியும், 1.200 கிலோ கிராம் பருப்பும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4.650 கிலோ கிராம் அரிசியும், 1.250 கிலோ கிராம் பருப்பும் அந்தந்த மாணவா்களின் பெற்றோா்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், புதுஅத்திக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவா் பி.சிவராமகிருஷ்ணன், துணைத் தலைவா் தனலட்சுமி, பள்ளி தலைமையாசிரியா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT