திண்டுக்கல்

கூடுதல் விலைக்கு முகக் கவசம் விற்பனை: திண்டுக்கல்லில் மருந்தகத்திற்கு பூட்டு

DIN

கூடுதல் விலைக்கு விலைக்கு முகக் கவசம் விற்பனை செய்ததாக திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள மருந்தகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி, இந்த பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. அதன்படி மருந்து ஆய்வாளா், தொழிலாளா் நல ஆய்வாளா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழுவினா் மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் மருந்தகத்தில் முகக் கவசம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மருந்து ஆய்வாளா் மற்றும் தொழிலாளா் நல ஆய்வாளா் கொண்ட குழு, அந்த மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது முகக் கவசம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அந்த மருந்தகத்திற்கு பூட்டுப் போட்ட அதிகாரிகள், உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT