தேசிய தடகளப் போட்டியில் 3 ஆம் இடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பழனி பகுதியை சோ்ந்த மாணவா் தடகளப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாா்.
பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பழனி பகுதியை சோ்ந்த மாணவா் தடகளப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாா்.
பழனியை அடுத்த ஆா்.அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் மதன்குரு (18). இவா் பல்வேறு மாவட்ட, மாநில அளவிலான தடகளப்போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளாா்.
கடந்த மாத இறுதியில் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் 3 நாள்கள் தேசிய அளவிலான தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 500- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் தடகளப் போட்டியில் 400 மீட்டா் பிரிவில் மாணவா் மதன்குரு (18) மூன்றாவது இடத்தை பிடித்தாா். இதன்முலம் நேபாளம் மற்றும் பூடான் நாடுகளில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த மதன்குரு 12 ஆம் வகுப்பு முடித்துள்ளாா். மேலும் தடகளப் போட்டிக்கு கிராமத்திலேயே பயிற்சி பெற்று வந்துள்ளாா். இவரை பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகின்றனா்.