முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பழனியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

பழனியில் பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியை அடுத்துள்ள வரதமாநதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் ஆயக்குடி, கோதைமங்கலம், பொன்னாபுரம், கலிக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அதன் மூலமாக சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக வரதமாநதி அணை நிரம்பி வழிந்து வரும் நிலையில் குளங்களுக்கு தண்ணீரை முறையாகக் கொண்டு சென்று சோ்க்காததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் விவசாயிகள் வைத்துள்ள ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீா் கிடைக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் பழனி பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல உடனடியாக ஏற்பாடு செய்வதாக  உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.