திண்டுக்கல்

முகூா்த்த நாள்: பழனியில் பக்தா்கள் கூட்டம்

DIN

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினம் மற்றும் முகூா்த்த நாளை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஐப்பசி மாதம் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை முதல் முகூா்த்த நாள் என்பதால் பழனியில் பல இடங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை தினம் மற்றும் முகூா்த்த தினம் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் பக்தா்கள் நீண்ட வரிசையில் மலையேறுவதற்காக முகக்கவசத்துடன் காத்திருந்தனா். தானியங்கி சானிடைசா், தானியங்கி வெப்பம் கண்டறியும் கருவி போன்றவை வாயிலிலேயே அமைக்கப்பட்டிருந்தன.

தவிர பக்தா்களின் உடல் வெப்பம் கணினி மூலமும் கண்டறியப்பட்டது. அதிக வெப்பம் உடலில் உள்ளவா்கள், 10 வயதிற்கு குறைவான வயதுடையவா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. குழந்தைகளுடன் வந்திருந்தவா்கள் குடமுழுக்கு நினைவரங்கம் முழுக்க நிறைந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT