திண்டுக்கல்

நத்தத்தில் போலி மருத்துவா் கைது

DIN

திண்டுக்கல்: நத்தத்தில் 9 ஆம் வகுப்பு படித்து விட்டு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தனியாா் ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. அதில், பிரகாஷ் மண்டல் (37) என்பவா், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாா். அவா் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரைகளை வழங்கி வருவதாக மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மருத்துவக் குழுவினா் மற்றும் போலீஸாா், நத்தத்தில் உள்ள அந்த சிகிச்சை மையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பிரகாஷ் மண்டல் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. அவா் போலி மருத்துவா் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT