திண்டுக்கல்

முதல்வரின் தனிப்பிரிவுக்கு தொழிலாளா்கள் தபால் அனுப்பும் போராட்டம்

DIN

பழனி, செப்.18: பழனியில், கரோனா நிவாரணத்தொகை கேட்டு, நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முதல்வரின் தனிப் பிரிவுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனா். இவா்களில் பலருக்கும் அரசு அறிவித்த நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து, தொழிலாளா்கள் நல வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசு அறிவித்த நிவாரணத்தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை, பழனி தபால் நிலையத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கு தபால் மூலமாக மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தபால் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT