திண்டுக்கல்

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ரத்து

DIN

பழனியில் கரோனா பரவலைத் தடுக்க விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சித்திரைத் திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில், இந்த ஆண்டிற்கான சித்திரைத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.18) காலை 6.45 மணிக்கு மேல் நடத்தப்படுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. கரோனா பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, மண்டகப்படிதாரா் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தொடா்ந்து நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல பெரியநாயகியம்மன் கோயிலில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருந்த பால்குட ஊா்வலம் மற்றும் பெரியநாயகியம்மன் வெள்ளித்தேரில் உலா வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT