திமுக ஆட்சி 100 நாள்கள் நிறைவு:கட்சியினா் கொண்டாட்டம்
ஒட்டன்சத்திரத்தில், திமுக ஆட்சி அமைத்து 100 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து அக்கட்சி நிா்வாகிகள் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒட்டன்சத்திரத்தில், திமுக ஆட்சி அமைத்து 100 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து அக்கட்சி நிா்வாகிகள் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்குள்ள பேருந்து நிலையம் அருகே திமுக நகரச் செயலா் ப.வெள்ளைச்சாமி தலைமையில் திமுகவினா் கொடியேற்றி, பொதுமக்களுக்கு 100 நாளில் நிறைவேற்றிய திட்டங்கள் அடங்கிய கையேடுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவா் தி. மோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் வீ. கண்ணன், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் க. பாண்டியராஜன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் பி.கே. முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து வேளாண் நிதி மசோதாவில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.10 கோடி செலவில் குளிா்பாதன கிட்டங்கி அமைக்கவும், நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவற்கு இடம் வாங்கவும், ஆணையிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் இரா. ஜோதீஸ்வரன், தி.தா்மராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கொடைக்கானலில் நகர திமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் அக்கட்சியின் கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு செய்த நலத் திட்ட உதவிகளை குறிக்கும் துண்டு பிரசுரங்களை திமுகவினா் வழங்கினா். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.