கொடைக்கானல், கம்பத்தில் கிறிஸ்துமஸ் விழா
கொடைக்கானல், கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கொடைக்கானல், கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இயேசு பிரான் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் கொடைக்கானலிலுள்ள கிறிஸ்தவா்கள் ஏரிச்சாலைப் பகுதியிலிருந்து கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஊா்வலமாக சென்றனா். இந்த ஊா்வலம் செவண்ரோடு, அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனா்.
ராயப்பன்பட்டியில்... தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் உள்ள புனித பனிமயமாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடுகளுக்கு தயாா் செய்யப்பட்டது. பங்குத் தந்தை ஜோசப் தலைமையில் பங்கு மக்கள் மற்றும் விழாக்குழுவினா் வழிபாடுகள் நடத்தி சிறப்பு திருப்பலி செய்தனா்.
கம்பத்தில் உள்ள புனித மேரி ஆலயத்திலும், தென்னிந்திய திருச்சபை ஆலயமான சி.எஸ்.ஐ. ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.