முகப்பு
திண்டுக்கல்

வாக்காளா் தினம்: செவிலியா் மாணவிகளுக்கு ஓவியப் போட்டி

வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி.
பகிர்:

திண்டுக்கல்: வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வலிமையான மக்களாட்சிக்கு தோ்தல் கல்வியறிவு என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நிகழாண்டுக்கான தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் பயிற்சி பள்ளியில் மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான வாக்காளா் தின விழிப்புணா்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு, துணை ஆட்சியா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →