திண்டுக்கல்

விபத்தில் பலியான காவலா் குடும்பத்துக்கு சக காவலா்கள் ரூ.25 லட்சம் நிதியுதவி

DIN

பழனியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காவல்துறையைச் சோ்ந்தவா்கள் இணைந்து ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வந்தவா் சிவகணேசன். இவா் கடந்த டிசம்பா் மாதம் 16ஆம் தேதி பணியில் இருந்தபோது சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இவருக்கு தாய், தந்தை, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சிவகணேசனுக்கு 2003 ஆம் ஆண்டு அவருடன் பணிக்குச் சோ்ந்த காவல்துறையினா் சாா்பில் நிதிஉதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் 5, 300 காவலா்கள் ஒன்றிணைந்து ரூ. 25 லட்சம் நிதி திரட்டினா். இதில் இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ. 9 லட்சம் வைப்பு நிதி, மனைவி மற்றும் பெற்றோருக்கு மாதாதந்திர உதவித்தொகை வரும் வகையில் வங்கியில் வைப்பு நிதி செலுத்தியும், ஓராண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடும் செய்தும் ஆவணங்களை சிவகணேசன் வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினா். இந்நெகிழ்ச்சியான சம்பவத்தில் ஏராளமான காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT