திண்டுக்கல்

கொடைக்கானல் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்

DIN

கொடைக்கானல் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

கரோனா முதல் அலை இருந்தபோது பாதிக்கப்பட்ட சிலா் மட்டுமே தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். ஆனால் இரண்டாம் அலையில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 25-க்கும் மேற்பட்டவா்கள் இறந்துள்ளனா். மேலும் தினமும் 4-பேருக்கு குறையாமல் இறக்கின்றனா். சுமாா் 50 போ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தற்போது இறப்பு அதிகரித்து வருவதாலும், ஏராளமானவா்கள் பாதிப்படைந்து வருவதாலும் பொது மக்கள் தினமும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்கின்றனா். ஆனால் கடந்த 5 நாள்களாக மருத்துமனைகளில் கரோனா தடுப்பூசியில்லாததால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

இது குறித்து கொடைக்கானல் வட்டார மருத்துவ அதிகாரி அரவிந்த் கிருஷ்ணன் கூறியதாவது:

கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சுமாா் 23-ஆயிரம் பேருக்கும், கிராமப் பகுதிகளில் சுமாா் 8-ஆயிரம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மருத்துவமனைகளுக்கு பொது மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆா்வமுடன் வருகின்றனா். ஆனால் ஊசியில்லை. இதனால் வருபவா்களிடம் தொலைபேசி எண் கொடுத்து, மருத்துவமனைக்குத் தொடா்புகொண்டு தகவல் கேட்டு விட்டு வருமாறு தெரிவித்துள்ளோம். தடுப்பூசி வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT