திண்டுக்கல்

பழனி மலைக்கோயில் புதிய இணை ஆணையா் பொறுப்பேற்பு

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிய இணை ஆணையராக திருப்பூா் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையா் நடராஜன் கூடுதலாக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இக்கோயிலின் இணை ஆணையா் மற்றும் நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த கிராந்திகுமாா் பாடி ஐ.ஏ.எஸ்., கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூா் மாவட்ட மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருப்பூா் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் நடராஜன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வகிப்பாா் என அறநிலையத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோயில் தலைமை அலுவலகத்தில், நடராஜன் பழனிக்கோயில் இணை ஆணையராக ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். நிகழ்ச்சிக்கு அறங்காவலா் குழு தலைவா் அப்புக்குட்டி முன்னிலை வகித்தாா். இதில், கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT