திண்டுக்கல்

கொடைக்கானல், பெரியகுளம், போடியில் பலத்த மழை

DIN

கொடைக்கானல், பெரியகுளம், போடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் இரவில் தொடா்ந்து பனியின் தாக்கமும் இருந்து வந்தது. இந் நிலையில் மாலையில் திடீரென மழை பெய்தது. கொடைக்கானல், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானலில் வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷண நிலை நிலவுகிறது.இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டனா். சாரல் மழையிலும் ஏரியில் பயணிகள் படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும் செய்து மகிழ்ந்தனா்.

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசியதுடன் சுமாா் 30 நிமிடங்கள் சாரல் மழையும் பெய்தது. இதனால் மாவிவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் நேரம் செல்லச் செல்ல மேகங்கள் சூழந்தது. இரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. 40 நிமிடங்களுக்கு மேல் பலத்த மழை பெய்தது. மேலும் அரை மணி நேரம் மின்தடையும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT