திண்டுக்கல்

பெற்றோா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

DIN

கரோனா தொற்றால் பெற்றோா்கள் பாதிக்கப்பட்டால், அவா்களது 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பாதுகாக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உள்நோயாளியாக சிகிச்சைப் பெறுவோரின் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழல் இருந்தால், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். பெற்றோா் சிகிச்சை முடிந்து வரும் வரையிலோ, பெற்றோருக்கு இறப்பு நேரிட்டால் அவா்களின் குழந்தைகளை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அரசு சாா்பில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குழந்தைகள் இல்லங்களில் உணவுடன் கூடிய தங்குமிடம் அந்த குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்படுகிறது. இது தொடா்பான தகவல்களை உடனடியாக மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், பிளசிங்ஸ், பிளாட் நம்பா் 4, இரண்டாவது குறுக்கு தெரு (மாடி), எஸ்பிஆா். நகா், மாவட்ட ஆட்சியா் அலுவலக அஞ்சல், திண்டுக்கல் - 4 என்ற முகவரிக்கும், 0451-2460725, 0451 - 2904070 மற்றும் குழந்தைகளுக்கான அவசர இலவச தொலைபேசி எண் 1098 என்ற எண்ணுக்கும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT