திண்டுக்கல்

மாநில அளவிலான கராத்தேபோட்டியில் கம்பம் மாணவர்கள் சாதனை

DIN

கம்பம்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள செண்பகனூர் தனியார் விடுதி வளாகத்தில் மதுரை நிகான் கோஜூரியோ கராத்தே இந்தியா அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி நடைபெற்றது.

அக்.2 முதல்  4  வரை நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிக்கு இயக்குநர் நாகச்சந்திரன் தலைமை தாங்கினார். 

திருப்பூர், கோவை, திண்டுக்கல்,மதுரை, தேனி, இராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து பயிற்சியாளர் வைரஹரீஸ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டினர்.

ஜூனியர் 10 வயதிற்குட்பட்ட கட்டா பிரிவில் சக்தி விநாயகர் மெட்ரிக் பள்ளி மாணவி இதன்யா முதலிடத்தையும், கம்பம் முகைதீன் ஆண்டவர் பள்ளி மாணவி சமிஹா இரண்டாமிடத்தையும்,15 வயதிற்குபட்ட பிரிவில் புதுப்பட்டி ஜெய்டெக் இண்டர்நேஷனல் பள்ளி மாணவன் தரணிதரன் மூன்றாம் இடத்தை  பிடித்தனர்.

சீனியர் கட்டா பிரிவில் தேனி கொடுவிலார் பட்டி கம்மாவர் கலை அறிவியல் கல்லூரி மாணவன் ராஜ்குமார் முதலிடத்தையும், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலை கல்லூரி மாணவன் செல்வகணபதி இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.

இதேபோல் சிலம்பம் போட்டியில் ராம்ஜெயம் பள்ளி மாணவன் ஸ்ரீஜன் இரண்டாம் இடமும், ஜெய்டெக் இண்டர்நேஷனல் பள்ளி மாணவன் பிரணாவ் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் டிசம்பர் மாதம் உடுமலைபேட்டையில் நடைபெறவுள்ள அகில இந்திய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT