திண்டுக்கல்

மன்னவனூா் ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும்

DIN

 கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனுா் ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கொடைக்கானல் மாவட்ட வன அதிகாரி திலீப் செய்தியாளா்களிடம் கூறியது: கொடைக்கானல் வனப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களான குணா குகை, பில்லா் ராக், மோயா் பாயிண்ட், பேரிஜம், பைன் பாரஸ்ட், மன்னவனூா் ஏரி, கூக்கால் ஏரி உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். இந்த இடங்களில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சரி செய்யப்படும்.

தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் அவா்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது. சுற்றுலா இடங்களில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு, வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். மன்னவனுா் சுற்றுலாத் தலத்தில் ரோப் கிளைவ் விரைவில் அமைக்கப்படும். அங்குள்ள ஏரியில் கூடுதலாக பரிசல்கள் இயக்கப்படும். பியா் சோழா அருவிப் பகுதியில் சிறுவா் பூங்கா அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT