முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் பூம்பாறை செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் பூம்பாறை செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே அதிக மேகமூட்டத்துடன் மழை பெய்தது. இதனால் கொடைக்கானல்- பூம்பாறை சாலையில் பழைமையான மரம் விழுந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினா் சென்று பொதுமக்களின் உதவியோடு மரத்தை அகற்றினா். அதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.