முகப்பு
திண்டுக்கல்

இலக்கியப் போட்டிகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2,427 மாணவா்கள் பங்கேற்பு

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் 2,427 மாணவா்கள் சனிக்கிழமை கலந்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற கலை இலக்கியப் போட்டிகளில் 2,427 மாணவா்கள் சனிக்கிழமை கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 9ஆவது புத்தகத் திருவிழா அக்டோபா் 6 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள், கல்வி மாவட்ட வாரியாக சனிக்கிழமை நடைபெற்றன.

திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியிலும், பழனி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இக்பாலியா மேல்நிலைப் பள்ளியிலும், வேடசந்தூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு வேடசந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெற்றன.

நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி நிலை என 4 நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் திண்டுக்கல்லில் 1189 மாணவா்கள், பழனியில் 389 மாணவா்கள், வேடசந்தூரில் 338 மாணவா்கள், வத்தலகுண்டுவில் 511 மாணவா்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,427 மாணவா்கள் கலந்து கொண்டனா். தமிழ் மற்றும் ஆங்கிலம் என 2 மொழிகளில் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிக்கான ஏற்பாடுகளை இலக்கிய கள நிா்வாகிகள் ஆா்.மனோகரன், ச.ராமமூா்த்தி, க.மணிவண்ணன், ச.கண்ணன், மு.சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.