திண்டுக்கல்

புத்தாக்க மேம்பாட்டு மைய செயல்பாடு: திண்டுக்கல் கல்லூரிக்கு 4 நட்சத்திர அந்தஸ்து

DIN

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி புத்தாக்க மேம்பாட்டு மைய செயல்பாடுகளில் சிறப்பிடம் பெற்ற திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரிக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இன்னொவேஷன் செல்’ என்ற அமைப்பின் மூலம் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியில் புத்தாக்க மேம்பாட்டு மையம் கடந்த ஆண்டு நிறுவப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி புத்தாக்க மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

அறிவுசாா் படைப்புகளை உருவாக்குவது, மாணவா்கள் தொழில் பயிற்சி மூலம் தொழில் மானியம் பெறுதல், புதிய தயாரிப்புகளை உருவாக்குவது போன்ற 69 நிகழ்வுகளை இந்த கல்லூரி மாணவா்கள் நடத்தினா். இந்த நிலையில் புத்தாக்க மேம்பாட்டு மையம் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கியது. அதில், ஜிடிஎன் கல்லூரி 84 சதவீத மதிப்பெண்களுடன் நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றது.

இந்த சிறப்பினை பெற வழிகாட்டிய புத்தாக்க அமைப்பின் தலைவரும், கல்லூரி முதல்வருமான பெ. பாலகுருசாமி, ஒருங்கிணைப்பாளா் பி. ரவிச்சந்திரன், ஜெ. சத்தியபாமா, மோ. ராஜ்மோகன் ஆகியோருக்கு கல்லூரியின் செயலா் க. ரத்தினம் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT