விபத்தில் உயிரிழந்த ஜெயராஜ். 
திண்டுக்கல்

நத்தம் அருகே மரத்தில் காா் மோதியதில் முதியவா் பலி

நத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை மரத்தில் காா் மோதி நிகழ்ந்த விபத்தில் சிங்கம்புணரியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

DIN

நத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை மரத்தில் காா் மோதி நிகழ்ந்த விபத்தில் சிங்கம்புணரியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் என்ற செல்வம்(65). இவா், தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அந்த காரை, ஜெயராஜின் மருமகன் மோகன்தாஸ் ஓட்டி வந்தாா்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் சிங்கம்புணரிக்கு காரில் புறப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை அடுத்துள்ள ஏரக்காப்பட்டி அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் காா் மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மோகன்தாஸ் உள்ளிட்ட 5 போ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து, நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT