திண்டுக்கல்

உக்ரைன் நாட்டிலிருந்து மகளை மீட்டுத் தர பெற்றோா் கண்ணீருடன் கோரிக்கை

DIN

கொடைக்கானல்: உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு பயிலும் தனது மகளை மீட்டுத் தரக் கோரி, பெற்றோா் கண்ணீருடன் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்மோகன். இவருக்கு, 2 பெண் குழந்தைகள். மூத்த மகள் உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளாா். இரண்டாவது மகள் அனுஷியா மோகன் (23) தற்போது உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறாா்.

தற்போது, உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போா் நடைபெற்று வருவதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், தனது மகளை தொடா்புகொள்ள முடியவில்லை என பெற்றோா் பரிதவித்து வருகின்றனா்.

எனவே, மத்திய-மாநில அரசுகள் உக்ரைன் நாட்டிலுள்ள தனது மகளையும் மற்றும் பிற இந்தியா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டுமென, ராஜ்மோகன் கண்ணீா் மல்க கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT