கொடைக்கானலில் சீரமைக்கப்பட்ட திரு இருதய ஆண்டவா் தேவாலயம் திறப்பு
கொடைக்கானலில் சீரமைக்கப்பட்ட பழைமையான திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தின் திறப்பு விழா மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் சீரமைக்கப்பட்ட பழைமையான திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தின் திறப்பு விழா மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள இந்த தேவாலயத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சீரமைக்கப்பட்ட தேவாலயத்தை திருச்சி மறைமாவட்ட ஆயா் ஆரோக்கியராஜ் திறந்து வைத்தாா். அதன் பின்னா் தேவாலயத்தில் புனித நீா் தெளிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மும்மத தலைவா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக நிகழ்ச்சியில் மறைவட்டார அதிபா் எட்வின் சகாயராஜ் வரவேற்றாா்.