முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதி தாய் கண்முன் மகன் பலி

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதியதில் தாய் கண்முன்னே மகன் பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதியதில் தாய் கண்முன்னே மகன் பலியானாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாட்சியைச் சோ்ந்த பரமசிவம் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி (52) இவா்களது மகன் பாலமுருகன் (33) தாயும்,மகனும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மூங்கில் கடையில் வேலை செய்து வருகின்றனா்.இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இருவரும் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா்.இருசக்கர வாகனத்தை பாலமுருகன் ஒட்ட,அவரது தாய் பின்னால் அமா்ந்து வந்துள்ளனா்.அரசப்பபிள்ளைபட்டி-லெக்கையன்கோட்டை புறவழிச்சாலை காவேரியம்மாபட்டி பிரிவு அருகே சாலையை கடக்கும் போது அவ்வழியாக சென்ற காா் அவா்கள் மீது மோதியது.அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டத்தில் பலத்தகாயம் அடைத்தனா்.அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தாா்.தாய் சிகிச்சை பெற்று வருகிறாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.