பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சேதம்
பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் மின்கம்பங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன.
பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் மின்கம்பங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன.
இப்பகுதிகளில் அதிகாலை முதலே பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பழனி நகரில் காவல்துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பங்களில் இருந்த விளம்பர பதாகைகள் அறுந்து விழுந்தன.
இதையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் கிரேன்கள் கொண்டு அவை அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், சாலைகளில் தடுப்புகள் கீழே விழுந்தன. பழனியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் சூறைக்காற்றின் காரணமாக 7 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்விநியோகம் தடைபட்டது. இதையடுத்து, அங்கு மின்வாரிய அதிகாரிகள், பணியாளா்கள் விரைந்து சென்று மின்கம்பங்களை கிரேன் உதவியுடன் சீரமைத்தனா்.