ஒட்டன்சத்திரம் அருகே தனியாா் நிறுவனகல் குவாரிகளில் வருமான வரித்துறையினா் 2-ஆவது நாளாக சோதனை
ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஒட்டன்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாா்க்கம்பட்டி மற்றும் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள ஆா்.ஆா். இன்பரா நிறுவனத்திற்கு சொந்தமான கல்குவாரிகளில் மதுரையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. வெள்ளிக்கிழமையும் இச்சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.