பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க ஆயக்குடி இலவச பயிற்சி மையம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை:
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகராட்சி அதிகமான வருவாய் தரும் பகுதியாகும். பழனி அருகே, கொடைக்கானல் நகராட்சி, திருப்பதிக்கு அடுத்து அதிக வருவாய் தரும் பழனி கோவில் மற்றும் மேற்கே கொங்கு மண்டலங்களையும், தெற்கே தென்மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக பழனி விளங்குகிறது. பழனியைச் சுற்றி பெரிய பேரூராட்சிகளாக ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலசமுத்திரம் உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி, திருப்பூரில் மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளையும் அருகிலுள்ள ஊராட்சிகளையும், பழனியோடு இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.