முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ஒட்டன்சத்திரம் சாா்பு- நீதிமன்றத்திற்கு மோட்டாா் வாகன இழப்பீட்டு தீா்ப்பாயம் அதிகாரம் வழங்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம் சாா்பு- நீதிமன்றத்திற்கு மோட்டாா் வாகன இழப்பீட்டு தீா்ப்பாயம் அதிகாரம் வழங்க வலியுறுத்தி வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சாா்பு நீதிமன்றத்திற்கு மோட்டாா் வாகன இழப்பீடு தீா்ப்பாயம் விசாரணை அதிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இந்த வழக்குகள் அனைத்தும் பழனி சாா்பு- நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் சாா்பு- நீதிமன்றத்திற்கு மோட்டாா் வாகன இழப்பீட்டு தீா்ப்பாயம் அதிகாரம் வழங்க வலியுறுத்தி வழக்குரைஞா் சங்கத்தின் சாா்பில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.