முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக கருத்தரங்குக் கூட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக கருத்தரங்குக் கூட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டமேற்படிப்பு குறித்த தகவல்களையும், தொழில் வாய்ப்புகள் குறித்தும் பேசினாா். தமிழ்த்துறை பேராசிரியா் வாசுகி ஜெயரத்னம் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தாா் விழாவில் கல்லூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.விழாவில் கல்லூரி பேராசிரியைகள், அலுவலா்கள்,மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.