முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே பூச்சி மருத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே பூச்சி மருத்தை குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை கரியகவுண்டன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தங்கராஜ் (55).இவா் குடும்ப பிரச்சனை காரணமாக செவ்வாய்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருத்தை குடித்து உயிருக்கு போராடியுள்ளாா்.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமையன்று உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.