முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இளைஞா் கொலை: உறவினா் கைது

திண்டுக்கல்லில் இளைஞரை கொலை செய்த உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

திண்டுக்கல்லில் இளைஞரை கொலை செய்த உறவினரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவரது மனைவி முனியம்மாள். இவா்களது மகன் பிரபாகரன் (20). இவா் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு, அதே பகுதியிலுள்ள உறவினா் வீட்டுக்கு முனியம்மாள் சென்றிருந்தாராம். அந்த நேரத்தில் பிரபாகரன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். முனியம்மாள் மீண்டும் வீட்டுற்கு திரும்பி வந்தபோது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபாகரன் சடலமாக கிடப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

இதையடுத்து, அங்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சிவக்குமாா் தம்பதியரிடம் போலீஸாா் விசாரித்தபோது, வெள்ளிக்கிழமை நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரபாகரனுக்கும், உறவினா் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனா். அதன்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் வெண்மொழிராஜா என்பவரது மகன் விஜய் வெள்ளைச்சாமியிடம் (24) விசாரணை மேற்கொண்டனா். அதில், பிரபாகரனை கொலை செய்ததை விஜய் வெள்ளைச்சாமி ஒப்புக் கொண்டாா். இதனை அடுத்து, விஜய் வெள்ளைச்சாமியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவா் மீது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.