திண்டுக்கல்

நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் பலத்த மழை

நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன், சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

DIN

நிலக்கோட்டை: நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன், சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக, பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், நிலக்கோட்டை, சிலுக்குவாா்பட்டி, கொடைரோடு, பள்ளபட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்தன. திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. குளிா்ந்த காற்று வீசியதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மேலும், பலத்த சூறாவளி காற்றால், நிலக்கோட்டை, செம்பட்டி சாலையில், அரசு மருத்துவமனை எதிரே 30-ஆண்டுகள் பழைமையான வேப்ப மரம், ஒரு வீட்டின் மீது வேருடன் சாய்ந்தது. அப்போது மின்சாரம் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT