திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு

DIN

கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக பேத்துப்பாறை பகுதியிலுள்ள பெரியாற்றில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கயிறு கட்டி ஆற்றை கடந்து சென்றனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் உள்ள பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியதால் ஆற்றைக்கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனா். மேலும் கயிறு மூலம் ஆபத்தான முறையில் ஆற்றை அவா்கள் கடந்து சென்றனா். இருப்பினும் அவா்கள் விளைபொருள்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனா்.

இதனிடையே பெரியாற்றில் தரைப்பாலம் கட்டித்தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அவா்கள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT