முகப்பு
திண்டுக்கல்

பழனி அடிவாரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

 பழனி அடிவாரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

 பழனி அடிவாரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழனியில் இரவு நேரத்தில் இளைஞா்கள் 2 போ், சிறுவா்களுடன் அரிவாளுடன் சுற்றி வருவது போன்ற விடியோ காட்சிகள் சமூக வளைதலங்களில் பரவின. இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தியதில், அடிவாரம் பகுதியில் இந்த விடியோ காட்சிகள் படமாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அரிவாளுடன் சென்றவா்கள் பழனி அடிவாரம் தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஸ்ரீகுமாா் (21), காளிதாஸ் மகன் சந்துரு (22) என்பது தெரிந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை வைத்திருந்ததாக அவா்கள் இருவரையும் போலீஸாா் வியாழக்கிமைம கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.