முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு ஆற்றுப் பகுதியில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா். இதில் முன் எச்சரிக்கை அறிவிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, பொதுமக்களை அப்புறப்படுத்துதல், தற்காலிக முகாம்களில் தங்க வைத்தல், முதலுதவி மருத்துவ பரிசோதனை செய்தல் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வனத்துறையினா், காவல்துறையினா், வருவாய்த்துறையினா், நெடுஞ்சாலைத்துறையினா், மருத்துவ துறையினா் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து கிராம மக்கள் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.